Ask your Question
Type in
Name :
Email ID :
City :
Your Question :
   

Questions :- நானும் கீழ்கண்ட நிலையை உணர்கிறேன். அய்யா நாங்கள் தெளிவு பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. அன்புள்ள அய்யா, நான் தங்களுடைய கருத்துக்களை புரிந்துகொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். அகத்தில் சும்மா இருக்குமாறு நீங்கள் கூறுகிறீர்கள். அதாவது மனதில் எந்த எண்ணம் வந்தாலும் அவற்றை தடுக்காது அப்படியே அனுமதிக்குமாறு சொல்கிறீர்கள். நீங்கள் கையில் எடுக்காத நிலையில் அந்த எண்ணங்களுக்கு ஆயுள் அரை நொடிதான் என்று சொல்கிறீர்கள். ஆனால் அந்த அரை நொடியில் அந்த எண்ணங்களை கையில் எடுக்காது இருக்க நான் விழிப்புநிலையில் தானே இருந்தாக வேண்டும். விழிப்பு நிலையில் இல்லாமல் அப்படியே எல்லா எண்ணங்களையும் விட்டுவிட்டால் நான் எப்போதும் பல எண்ணங்களோடு மயக்க நிலையில் இருப்பதாய் தான் உணர்கிறேன். பல எண்ணங்கள் தோன்றி கொண்டே இருக்க நான் அவற்றை அனுபவிப்பவனாய் சில நேரம் துக்கத்தோடும் சில நேரம் மகிழ்ச்சியோடும் சில நேரம் பயத்தோடும் என மாறிக்கொண்டே இருக்கிறேன். இதில் எனக்கு தெளிவு நிலை ஏற்பட்டது போல தெரியவில்லை. குழப்பத்தில் நீடிப்பது போல் தான் படுகிறது. இதிலிருந்து தெளிவு பெற நீங்கள் உதவ வேண்டும்.   Posted By: சிவா on November, 2012

Answers :- சும்மா இருப்பது நமது செயலன்று. அது நம் முயற்சியால் வருவதுமன்று. முயற்சியை கைவிடுவதால் வருவது. மனதில் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்பதையும் அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் மிக தெளிவாக புரிந்து கொள்வது மட்டுமே நமது வேலை. புரிந்துகொண்டு நமது தோல்வியை ஒப்புக்கொண்டால் மட்டும் போதும், முயற்சி தானாக கைவிடப்படும். இங்கு .விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்பதுமே போராட்டம்தான். அதுவும் தேவையற்றது. . நம்மை அறியாமல் எவ்வளவு நேரம் போராடிவிட்டாலும் தவறில்லை. அவற்றின் ஆயுள் அரை நொடியாக மட்டும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். நமக்கு தெரிந்து நாமாக எதிர்த்து போராடாமல் இருந்தால் போதும். மேலும் இதை புரிந்து கொள்வதால் எந்த எண்ணமும் உணர்வுகளும் வரவே வராத நிலை ஏற்பட்டுவிடும் என்று பொருள் கொள்ள வேண்டாம். அது ஆரோக்கியமும் அன்று. நமது இயல்புக்கு தகுந்த எல்லா உணர்வுகளும் எண்ணங்களும் தாமாக வந்து தாமாக மறைவதே சரியான நிலை. இதுவே மனதின் இயல்பான இயக்கம். நமது விழிப்புநிலையும் முயற்சியுமே நமது மனதின் இயல்பான இயக்கத்தில் குறுக்கீடு செய்து பிரச்சினையையும் போராட்டத்தையும் நீடித்துவிடுகிறது. எனவே நமது இல்லாமையை புரிந்துகொள்வது மட்டுமே நமது வேலை. விடுதலை என்பது தமாக வந்துவிடும்.   Answered By: Sri Bagavath on November, 2012

Questions :- அன்புள்ள அய்யா, நான் தங்களுடைய கருத்துக்களை புரிந்துகொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். அகத்தில் சும்மா இருக்குமாறு நீங்கள் கூறுகிறீர்கள். அதாவது மனதில் எந்த எண்ணம் வந்தாலும் அவற்றை தடுக்காது அப்படியே அனுமதிக்குமாறு சொல்கிறீர்கள். நீங்கள் கையில் எடுக்காத நிலையில் அந்த எண்ணங்களுக்கு ஆயுள் அரை நொடிதான் என்று சொல்கிறீர்கள். ஆனால் அந்த அரை நொடியில் அந்த எண்ணங்களை கையில் எடுக்காது இருக்க நான் விழிப்புநிலையில் தானே இருந்தாக வேண்டும். விழிப்பு நிலையில் இல்லாமல் அப்படியே எல்லா எண்ணங்களையும் விட்டுவிட்டால் நான் எப்போதும் பல எண்ணங்களோடு மயக்க நிலையில் இருப்பதாய் தான் உணர்கிறேன். பல எண்ணங்கள் தோன்றி கொண்டே இருக்க நான் அவற்றை அனுபவிப்பவனாய் சில நேரம் துக்கத்தோடும் சில நேரம் மகிழ்ச்சியோடும் சில நேரம் பயத்தோடும் என மாறிக்கொண்டே இருக்கிறேன். இதில் எனக்கு தெளிவு நிலை ஏற்பட்டது போல தெரியவில்லை. குழப்பத்தில் நீடிப்பது போல் தான் படுகிறது. இதிலிருந்து தெளிவு பெற நீங்கள் உதவ வேண்டும்.   Posted By: Umaramanan on May, 2012

Answers :- நன்றி, விரைவில் பதில் தரப்படும்   Answered By: Sri Bagavath on May, 2012

Questions :- அன்புள்ள அய்யா, "எந்த செயல் நடந்தாலும் அதனுடன், இயல்பாக பொருந்தி கொள்ளுதல் வேண்டும் " என கூறிஉள்ளீர்கள். சரி. ஆனால் நமக்கு எதிரே உலகத்தில் வன்முறை நடக்கிறது, தீவிரவாதங்கள் நடக்கின்றன. அவற்றுடன் எவ்வாறு பொருந்திக் கொள்ள இயலும்? தயவு செய்து விளக்கவும்.   Posted By: valli on March, 2012

Answers :- அது அகத்திற்கு மட்டுமே, "இயல்பாக பொருந்தி கொள்ளுதல்" என்பதை விட "முரண்படாமல் சும்மா இறுத்தல்" என்பதே சரி. மனத்தை சீரமைக்க எதுவும் செய்யதேவை இல்லை. அது தானாக சரியாகிவிடும். புற உலகில் எது சரியோ எது தர்மமோ அதை செய்யவேண்டும். கலங்கிய குளத்தை தெளியவைக்க நாம் ஏதும் செய்யதேவை இல்லை. அதுபோல் மனத்தை சீரமைக்க எதுவும் செய்யதேவை இல்லை என்பதை புரிந்து கொண்டால் போதும்.   Answered By: Sri Bagavath on March, 2012

Questions :- அன்புள்ள ஐயா, “இந்த உணர்வுதான் வரவேண்டும்” “இந்த உணர்வு வர கூடாது” என்ற எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் மனதிற்கு கிடையாது. ஆனால் புறத்தில் நமது செயல் முறையானதாக இருக்கவேண்டும். ஒழுக்கங்களை கடைபிடிக்கவேண்டும். ---மனதில் ஒன்று நினைத்து புறத்தில் ஒன்று செய்வது this sounds like a conflict. When you feel something inside & act righteous outside isnt being a hypocrite? விளங்கவில்லை தயவு செய்து விளக்குங்கள். அன்புடன் Hema   Posted By: hema on March, 2012

Answers :- சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நமக்கு எத்தனையோ எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. அவற்றை அனைத்தையும் நாம் கண்டுகொள்வதில்லை, செயல்படுத்துவதில்லை. ஆனால் நமக்கு பிடிக்காத எண்ணமோ அல்லது உணர்வோ தோன்றும்போது, இதுபோன்ற எண்ணமோ உணர்வோ வரகூடாது என்று அதனோடு முரண்பட்டு போராடுகிறோம். பிடித்த எண்ணமோ, உணர்வோ தோன்றும்போது, அதை நீடிக்க அல்லது தக்க வைக்க விரும்புகிறோம். நமக்கு தோன்றும் எண்ணங்கள் தீயவையோ நல்லவையோ, தானாக தோன்றியவைதான், மேலும் அதுதான் நம் யதார்த்தமாகவும் இருக்கிறது. அவற்றின் இயல்பே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தோன்றி மறையக்கூடியதே. அவற்றின் ஆயுள் வெறும் 1/2 வினாடி மட்டுமே. அதன் மீது வெறுப்பு கொண்டு முரண்படுவதாலும், விருப்பம் கொண்டு இணைவதாலும் மட்டுமே, அவற்றின் கால அளவு நீடிக்க படுகின்றன. இவ்வாறு நீடிக்க படும் எண்ணமோ உணர்வோ தான் உடலில் உணர்ச்சியாக மாறி செயலுக்கு தூண்டுகின்றன. நல்ல எண்ணங்களோடு இணைந்து நல்ல காரியங்களை செய்யலாம். தீய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலே போதும். தானாக வருவது Thought. அதனோடு போராடுவதால் Thinking மாற்றி விடுகிறோம். அதுதான் பிரச்சினை.   Answered By: Sri Bagavath on March, 2012

Questions :- "உணர்விற்கும், புறச்செயலிற்கும் இடையே ஓர் இடைவெளி தோன்றி விடும்" என்று சொல்லி உள்ளீர்கள். அது எவ்வாறு என தயவு செய்து சற்று விளக்கமாக சொல்லவும். இப்படிக்கு, தங்கள் புத்தகங்களை தினமும் படித்து வரும் வாசகி.   Posted By: Valli on March, 2012

Answers :- நமக்கு எத்தனையோ உணர்வுகள் தோன்றுகின்றன . உதாரணத்திற்கு நமக்கு ஒருவர் மீது கோபம் ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். அவர் நமக்கு கீழ் பணிபுரிபவராக இருந்ததால், அவர்மீது கோபத்தை காட்டுவோம், அவர் நம் மேலதிகாரியாக இருக்கும் பட்சத்தில் கோபத்தை கட்டுப்படுத்தி மன பாதிப்புக்கு உள்ளாவோம். நமக்கு தோன்றிய உணர்வுகளை, நாமாக உருவாக்கவில்லை, இருந்தாலும் அதை நமது உணர்வாக எடுத்துக்கொண்டு அதனோடு போராடிவிடுகிறோம். இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகிறது. இப் புரிதலை புரிந்துகொண்ட பிறகு, அதாவது நமக்கு தோன்றும் உணர்வுகள் அனைத்தும் நமது கட்டுபாட்டில் இல்லை, அவை தாமாக தோன்ற கூடியவை என்பதை முழுமையாக புரிந்து கொண்ட பிறகு, நம் உணர்வுகளை எதிர்த்து போராடிய மனம் போராடாத மனமாக மாறிவிடுகிறது. இதனால் நமக்கு தோன்றிய கோபம் எப்போது நமக்கு தெரியவருகிறதோ, அந்த வினாடியே அது மின்னலை போல் மறைந்துவிடுகிறது. உடனே அது செயலுக்கு வருவதில்லை, அந்த சூழ்நிலைக்கு கோபம் தேவை என்றால் மட்டுமே அந்த உணர்வோடு நம்மை இணைத்து (Adopt) கொள்ளலாம்.   Answered By: Sri Bagavath on March, 2012

Questions :- கோப உணர்வு வந்தால் அதன் தாக்கம் குறைய வெகு நேரமாகிறதே ஏன் ?   Posted By: RAJENDRAN on February, 2012

Answers :- உங்களை அறியாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கட்டும். கோபம் ஏற்பட்டது எப்பொழுது உங்களுக்கு தெரிகிறதோ, அப்பொழுதே மறைந்துவிட்டிருகிறது. மறைந்ததை எதிர்த்து நீங்கள் போராடுவதாலேயே மீண்டும் அவ்வுணர்வு உயிர்பெறுகிறது.   Answered By: Sri Bagavath on March, 2012

Questions :- ஞானம் பெற்றவர்கள் அவர்களின் ஞான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பது பற்றி ?   Posted By: ராஜேந்திரன் R on February, 2012

Answers :- புரிதலை பகிர்ந்து கொள்ளலாம், பகிர்ந்து கொள்வார்கள். இதுவே புரிதலை புரிந்துகொண்டோம் என்று confirm செய்வதாகும்.   Answered By: Sri Bagavath on March, 2012

Questions :- மனதில் தோன்றும் முறையற்ற பால் உணர்வை எதிர்கொள்வது எவ்வாறு ?   Posted By: பிரபு on January, 2012

Answers :- சராசரி மனிதர்கள் இதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை, ஆனால் ஆன்மிக வழியில் பயணிப்பவர்களில் பலர் இதை ஓர் அடிப்படைப் பிரச்சினையாகவும், அன்றாடப் பிரச்சினையாகவும் எதிர்கொள்கின்றனர். மனத்தை பொறுத்தவரை முறையானது, முறையற்றது என எதுவும் கிடையாது. இயற்கையில் எல்லா உயிரினங்களுக்குமே இந்த ஈர்ப்பு உணர்வு உண்டு. அது போன்றுதான் நமக்கு ஏற்ப்படும் பால் உணர்வும். எல்லா உணர்வுகளும் தோன்றி மறையும் தருவாயிலேயே நம்மால் அடையாளம்கண்டு கொள்ளபடுகிறது. மனத்தில் தோன்றும் இந்த ஈர்ப்பு உணர்வை குற்ற உணர்ச்சியாக எடுத்துக்கொள்ளதேவையில்லை. அவற்றின் ஆயுள் ½ வினாடியே, இது போன்ற உணர்வே நமக்கு வரக்கூடாது என்று போராடும்போது தான் மறையும்தருவாயில் இருக்கும் உணர்வை மீண்டும் புதுபித்து விடுகிறோம். “இந்த உணர்வுதான் வரவேண்டும்” “இந்த உணர்வு வர கூடாது” என்ற எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் மனதிற்கு கிடையாது. ஆனால் புறத்தில் நமது செயல் முறையானதாக இருக்கவேண்டும். ஒழுக்கங்களை கடைபிடிக்கவேண்டும். மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்துகொண்டாலே போதும். தன்னையே எதிர்த்துப் போராடிய மனம், போராடாத மனமாக மாறிவிடுகிறது. போராடாத மனத்தில் எந்த உணர்வும் தங்கியிருக்கபோவதில்லை. உணர்வு பிரவாகமாகவே மாறிவிடுகிறது. இதைத்தான் “ Liberated mind ” விடுதளையுற்ற மனம் என்று சொல்லுகிறோம். விடுதலையுற்ற மனத்தில், உணர்வுக்கும் புறச்செயலுக்கும் இடையே ஓர் இடைவேளி தோன்றிவிடும். உணர்வை எதிர்த்து போராடாதபோது, புறச்செயல் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.   Answered By: Sri Bagavath on January, 2012

Questions :- ayya gnanam adainthal manam santhosamaga irukkuma   Posted By: RAJYESH ADITHIYHA on December, 2011

Answers :- சந்தோசத்தை தேடாமல் இருக்கும்.   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- whenever im into some problem,i dont get a resolution at that moment. But after some time when the mind is in a relaxed state i feel the problem is nothing. So how to be in a constant state of awareness all the time?   Posted By: ashwini kumar on December, 2011

Answers :- no need to constant state of awareness all the time.   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- திறந்த மனதுடன் அணுகுதல் என்பதை எனக்கு உதாரணத்துடன் புரிய வையுங்கள்?   Posted By: maheshwari on August, 2011

Answers :- ஏற்கனேவே வைத்திருக்கும் கருத்துக்களையும் முடிவுகளையும் மாற்றியமைக்கத்தூண்டும் எந்த விதமான புதிய கருத்துகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள மாட்டேன் என்ற பிடிவாதம் இருக்கக் கூடாது   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- பல குருமார்களை சந்திப்பது எனக்குப் பிடிக்கிறது. ஆனால் ஒவ்வொரு குருவின் அமைப்பும் ஒவ்வொரு பாதையை போதிக்கிறது. அவர்களிடம் பெறும் தீட்சையின்படி நாம் நடக்க வேண்டும் என்று உறுதி கூறும்படியும் அதுவே குருதட்சனை என்றும் சொல்லும்போது அனைத்தையும் தொடர முடிவதில்லை. அதனால் பல குருமார்களை சந்திப்பது என்னும் என் ஆசை தர்மச்ங்கடமாகிறது. நான் என்ன செய்வது?   Posted By: kumaresh on August, 2011

Answers :- உங்களுக்கு பிடித்த வழியில் செல்லுங்கள்.   Answered By: Sri Bagavath on March, 2012

Questions :- திறந்த மனதுடன் அணுகுதல் என்பதை எனக்கு உதாரணத்துடன் புரிய வையுங்கள்?   Posted By: maheshwari on August, 2011

Answers :- ஏற்கனேவே வைத்திருக்கும் கருத்துக்களையும் முடிவுகளையும் மாற்றியமைக்கத்தூண்டும் எந்த விதமான புதிய கருத்துகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள மாட்டேன் என்ற பிடிவாதம் இருக்கக் கூடாது, பிடிவாதம் இல்லாமல் அணுகுவதே திறந்த மனதுடன் அனுகுதலாகும்.   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- What is the purpose of our life on this planet?   Posted By: Era.Tharumarasan on August, 2011

Answers :- just living with out purpose   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- gananam அடைவது அவ்வளவு சுலபமா?   Posted By: Saravanan on July, 2011

Answers :- திறந்த மனதுடன் அணுகினால் மிகவும் சுலபம்.   Answered By: Sri Bagavath on July, 2011

Questions :- நான் யார் ? கனவுகளும் கற்பனை களும் எண்ணங்களை சுமக்கும் நான் யார் ?   Posted By: கோயம்புத்தூர் பாலு on June, 2011

Answers :- கனவும் கற்பனையும் எண்ணமும்   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- Sir, What is enlightenment? Are there enlightened people? What does one do to attain it?   Posted By: Anand on May, 2011

Answers :- please read the book of Dont Delay Enlightenment. there is answer for you.   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- why i born this world ?   Posted By: V.M.AMUTHARASU on May, 2011

Answers :- For living   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- மதிற்பிற்குரிய பகவத் ஐயா அவர்களுக்கு, என்னுடைய 16 வயது முதல் எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அப்பொழுது நான் எனக்கு தெரிந்த ஆன்மீக பெரியோர்களான ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார் போன்றோரின் வாழ்க்கை & போதனைகளையும் படித்தேன். இவர்கள் அனைவரது வாழ்விலும் பொதுவாக நான் காண்பது அன்பு, இறை பக்தி, தியானம். முக்தி அடைய ஒவ்வொருவரும் ஒரு மார்க்கத்தை பின்பற்றியுள்ளனர். ராமகிருஷ்ண பரமஹம்சர் காலி தேவியின் மீது பக்தி பூண்டு முக்தி எய்தினார், விவேகானந்தர் & ரமணர் தியானம் மூலம் முக்தி பெற்றனர், வள்ளலார் அன்பின் மூலம் "மரணமில்லா பேரு வாழ்வு" பெற்றார். இவர்களையெல்லாம் காணும் பொழுது ஏதோ ஒன்றை செய்துதான் ஞானம் பெற முடியும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தங்களது "தியானத்தை விடு ஞானத்தை பெறு" புத்தகத்தை படித்தவுடன் ஞானம் என்றால் என்ன என்றும் மேலும் அதை பெற நாம் ஒன்றும் செய்ய தேவை இல்லை, அது ஒரு புரிதல் என்று உணர்ந்து கொண்டேன். எந்த முயற்சியும் இல்லாமல் இருக்கும் நிலையில் ஞானம் தானாக வெளிப்படும் என்பதை புரிந்து கொண்டேன். மிக எளிமையான, தெளிவான, அருமையான விளக்கம், மிக்க நன்றி. ஆனாலும் என் மனதில் ஒரு சில சந்தேகங்கள் இருந்த வண்ணம் உள்ளது. - வள்ளலார் அருளிய மரணமில்லா பேரு வாழ்வும் தாங்கள் கூறும் ஞான விடுதலையும் ஒன்றா ? - வள்ளலார் & பட்டினத்தார் மற்றும் பல சித்தர்கள் எல்லோரும் இந்த தூல உடலை இழக்காமல் அதை வேறு ஒரு உயர்ந்த நிலைக்கு மாற்றி நமது அகக் கண்களுக்கு புலப்படாமல் மறைந்து விட்டனரே. அவர்கள் அடைந்தது என்ன? - உயிர் என்றால் என்ன? எனது இந்த சந்தேகங்கள் சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை, என் மனதில் தோன்றியதை அப்படியே கேட்கிறேன். தயவு கூர்ந்து எனது இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் தருமாறு கேட்டுகொள்கிறேன். நன்றி ஐயா!!! அன்புடன், முரளி. சேலம்.   Posted By: Murali on March, 2011

Answers :- அவர்கள் பக்தியின் உயந்த நிலையான சரணாகதியின் மூலம் முக்தி அடைந்தார்கள். சரணாகதிக்கு பயிற்சி முயற்சிகள் உதவாது. நாம் நம் மனதில் தோன்றும் உணர்வுகளை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்ற இயலாமையை புரிந்துகொள்வதால் அக சரணாகதி ஏற்படுகிறது. இதுவே முக்தியை கொடுக்கும் புரிதல். நீங்கள் கேட்கும் நிலைகள் சக்தி நிலைகளோடு சேர்ந்தவை. அவைகள் பயிற்சி முயற்சிகளால் வருபவை. முக்தி அடைந்தவர்கள் சக்திநிலைகள் பெற்றிருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, அதேபோல் சக்திநிலைகளை பெற்றவர்கள் அனைவரும் முக்தி பெற்றவரும் அல்ல. முக்தி அடைந்தவர்கள் எந்த சக்திநிலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- ஞானம் பெற தகுதி என்ன ?   Posted By: kamal on February, 2011

Answers :- 1. ஆன்மீக வாழ்வில் ஆர்வமும் அக்கறையும் வேண்டும். (அதற்காக கடும்தவம் புரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை) 2. ஆன்மீக நூல்களில் ஓரளவு அடிப்படையான பரிச்சயம் இருக்க வேண்டும் (அதற்காக அனைத்து ஆன்மீக நூல்களையும் ஐயம் திரிபறக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை). 3. நியாயமான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் திறந்த மனம் வேண்டும் (ஏற்கனேவே வைத்திருக்கும் கருத்துக்களையும் முடிவுகளையும் மாற்றியமைக்கத்தூண்டும் எந்த விதமான புதிய கருத்துகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள மாட்டேன் என்ற பிடிவாதம் இருக்கக் கூடாது). 4. என்னுடைய தகுதிக்கும் இயல்புக்கும் ஞானமெல்லாம் இந்த ஜென்மத்தில் ஏற்பட்டது என்ற தாழ்வு மனப்பான்மையும் அவ நம்பிக்கையும் இருக்க கூடாது) இந்தச் சாதாரணமான, நியாயமான அடிப்படை தகுதிகள் கொண்ட அனைவராலும் ஞானம் பெற முடியும்.   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- Pls Explain about how to live in non Duality?   Posted By: Siva N.C on January, 2011

Answers :- நம் மனதை எதித்து செயல்படும் நம் செயல் அனைத்தும் சுயமுரன்பாட்டையே உருவாக்கும். இதுவே இரட்டை தன்மை (DUALITY). அகத்தை எதிர்த்து போராடாமல் அதில் தாமாக தோன்றும் அனைத்து உணர்வுகளையும் அதன் போக்கில் வந்து செல்ல அனுமதித்து சும்மா இருப்பதே ஒருமை தன்மையோடு (ONENESS) இருப்பதாகும்.   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- how did we classify outer and inner world.you said that tha things happened in outer world could not affect the inner world...   Posted By: sugumarmurugan on December, 2010

Answers :- If we expect Psychological perfections, it is inner world. It is never possible. But in out side, perfection will come by only our activities.   Answered By: Sri Bagavath on October, 2012

Questions :- What is Individual,Collective and Cosmic Consciousness ? Is Liberation / Salvation attainment of Cosmic Consciousness ? Is it like if Cosmis consciousness is attained we will have a feeling of a Diffused Awareness like in a dream ie.,The World appear as a dream and the dreamer knows that it is a dream and just enjoying the show effortlessly ?   Posted By: Chandrasekar on December, 2010

Answers :- There is consciousness only. We can’t classify it into three. When we have individual consciousness, we feel us, as an individual. Otherwise, the total consciousness itself becomes unconscious. A healthy body won’t feel its existence of being. If we are feverish, we will know the existence of our body prominently. A healthy body is always unconscious. It is consciously unconscious. If we take it to be the role of a dreamer or witness, it’s nothing but our thought and imagination. We attend everything only by our mind. We recognize everything only when we convert everything as the product of our mind. But our mind is not a static one. It is like a mirror and it reflects, whatever comes in front of it. Similarly, we understand and recognize everything, as the reflections of our mind. All our reflections are as temporary as passing clouds. Unless we don’t catch hold of such reflections, they come on their own and fade on their own. It is meaningful when it happens. It is dream like when it is over. When our mind responses to a situation, it becomes conscious. When the response is over, our mind becomes unconscious. It is consciously unconscious. The mind which is functioning without self contradictions, becomes unconscious. The healthy mind is consciously unconscious   Answered By: Sri Bagavath on December, 2010

Questions :- Respected sir Your books on Enlightment are great treasures. There are some questions not on the unseen-the prior to mind because it is prior to concepts ; but I have some question on action the result of mind. We are not dreams ,we are just being dreamt ( by someone) Everything happens on its own , so what or who is there to own. Bheeshmar We cannot even act according to our will in our dream , how can we act or decide something if we are just a character in someone’s ( god , nature , consciousness ) dream. In short the below paragraph is to say that there is no inherent goodness or bad in anything ; and If something should happen it will happen . Englightment is nothing to do with the concepts of mind ; because it is prior to mind- if something should happen let it happen who cares. There is nothing like Good and Bad; Happiness or Sadness (Sukka or Dukka-Ka means space ; so these two are just a projections in the space) . Good and bad is just a relative phenomenon or interdependent . Good feeds itself in Bad and bad feeds itself in Good ; Individually they don’t exist. If Theresa should exist , Hitler should exist; The duality is essence of life ; it the one through which the mind dances. Prior to mind it is unseen ; but after mind involves it is seen so duality is essence of manifestation . Each society ,family ,people defines good according to itself or himself. What is good to a Muslim is not good to a Hindu; what is good to a Christian is not good to a Buddhist. Not only that, what is good in one culture is bad in another culture. A law has to be universal. But a law cannot be a universal because it is product of mind ; mind lives on paradoxes ; based on this paradoxes we cannot approach the prior state using a concept or law. The moment we realize that our mind is just a product of various concepts then who cares if something should happen let it happen . Why we do something , the physical action is propelled by a mental action , so now what is a mental action ; it is only bundle of thoughts ; now what is thought it is only rubbish concepts that society , culture , parents , teachers programmed us. As you said in your previous books ; “If you are a human being you will have thoughts and response” Yes based on our conditioning we have thoughts ; there are nothing like pure thoughts in this universe all are only conditioned. The conditioning IS THE PRIME ESSENCE of the programming in the mind-body organism. My point is that science accepts that the DNA in each individual is unique. There are no two human bodies with the same DNA. So based on our conditioning thoughts arise ; and these thoughts give rise to action. Conditioning is a eternal process . The instrument, because of the ego and the conditioning, thinks that it is his action or her action. But the point is that, at any moment, any action that happens through any body-mind organism is something which is supposed to happen at that moment at that time and place through that particular body-mind organism, according to nature according to the cosmic law. We can take your example- Beating a manager or not beating him ; it is not based on our intellect ; it is based on the society and circumstances. For example I was in Saudi Arabia there if a manger scolds us we can beat him . But in India there is no such law ; but again we are conditioned by our religion ; parents and our friends etc. Based on our conditioning we will react; we can’t do anything ; our intellect is just a good whole product of conditioning . If Nature or God or fate is decided that we should beat the manager we will beat him there will be a complete set- up ; the environment , the quality of the situation will be provided to us so we will beat him. All actions happening through all the body-mind organisms at any one time is exactly what is supposed to be, according to the cosmic law. No human being does anything —the basic point is that there is no Individual I(doer) to do this. As buddha said – 1.Emptiness is form and form is emptiness 2.Events happen , deeds are done but there is no individual doer. So for the story of Indra given in your forthcomming book my point of view is ; if something bad happens it is because of Indra ; if something good happens it is also because of lord Indra . If something should happen it will happen ; there is no pure I or real I to take the rewards or guilt . All actions through all human beings are happenings, created by God or nature or according to the cosmic law. Everything is projection of I from which thought arises ; but the beauty is Even I is a thought, so if I is just an illusion or a unlatched chain or a concept ; so who cares if something should happen let it happen (Enlightment , happiness , sadness , good , bad); it is nothing to do with the unseen which is prior to I ( no mind ,   Posted By: s.bheeshmar on December, 2010

Answers :- Please wait   Answered By: Sri Bagavath on December, 2010

Questions :- who am i?   Posted By: M.dhandapani on December, 2010

Answers :- It is you   Answered By: Sri Bagavath on December, 2010

Questions :- Thanks for your kindness to answer my previous question. Just I couldnt accept the fact that how come this insanity is so pervasive as if that is what is intended in this divine flow, if only gods will is in action, then where is the need for changing anything, i mean both we suffering against the cosmic flow without knowing we cannot change it or being in harmony absorbed as an completely automated entity, is there any difference, i mean at any point what can a dream character do to possibly understand his position, even seeing that he is a dream character would also is just another thought that the dreamer is imposing on one of his own projections, since at any point of time the dream is anyway in complete control of the dreamer. Eventhough as you say we dont bring in the change in attitude ourselves, the mind anticipates that as the attainment in trying to see the fact as nothing is there to attain wherein back in the mind it is anticipating to understand the ultimate understanding, it is like again becoming prey for the trickiness of the mind. So many years of the thought process, iterated and re-iterated to make our conviction, that we born, live and die as an entity of our own will, executing our own duties and responsibilities, to fulfill our own destinies. Is it what we try to do is just another anti-dote which is very specific to the current situation that is in place. From zero, everything is a number, from nothing everything is an idea. As Wei wu wei says, the mere thought of I is instantaneous bondage. But onething couldnt understand is the same, how come this insanity is so pervasive as if that is what intended. I apologize, I know i have clearly confused myself, please clarify.   Posted By: Saravanan on December, 2010

Answers :- Please imagine a vast sea; waves are there in upper portion of the sea. Waves are nothing but our conscious experiences, including our thoughts. We need not try to make a waveless sea. If we try, it is nothing but the effort of wave itself. It is nothing but the effort of establishing a wave itself. The entity, which tries to pacify the struggle, is itself a part of the struggle. So, naturally we ask,’ how shall we get order in our experience?’ We naturally expect a remedy. Is it not? But expecting a remedy alone, is the problem. We expect as if we can get remedy. But the real fact is that there cannot be a waveless sea. Wave is natural in the sea. The thing which tries to control waves, is also a wave. If we try, it will be an endless game. Assuming responsibility to do something, is the real problem. But we do not aware of this basic problem. We are always become serious of doing something or the other. We want something; we want to establish a status. Thereby, we assume a responsibility to achieve the same. Our responsibility is our bondage. If we don’t need anything in the name of higher status – in the name of self realization or in the name of psychological perfection, then there is no necessity for us to assume responsibility. Responsibility is nothing but the responsibility of a wave to control the other waves. It is nothing but the movement of the wave itself. So there is nothing to correct ourselves. If we try to correct ourselves, waves alone get importance. If we don’t correct ourselves, then all waves become unimportant. Then, the waves become part of the total sea.   Answered By: Sri Bagavath on December, 2010

Questions :- How can i understand that i got enlightenment. Can you explain me its feelings and how i will be differ with other persons ?   Posted By: G.BALACHANDRAN on December, 2010

Answers :- If you are able to take your psychological structure whole heartedly, it is the end of everything. Instead, if you try to do something for your psychological perfection then you are still in the process of search. Enlightenment means an understanding that you can’t do anything for your psychological change of perfection. Enlightenment means you needn’t have any responsibility to correct yourself psychologically. If you are able to disown your responsibility, your mind becomes a liberated mind. Your psyche becomes a liberated one. Then, no thought will encircle itself, as a feeling of sorrow or suffering. Our thought will flow like a river without having any eddy. The scientists say that the earth gets the force of gravitation, only because of it’s rotation by itself. Similarly if our thought encircles around a feeling, the feeling gathers weight. If our thoughts enter the regular flow of the mind, then we won’t feel the heaviness of our feelings. Thereby you can identify that you have got enlightened and liberated.   Answered By: Sri Bagavath on December, 2010

Questions :- As you have said in the book Salvation without Meditation my mind is also thinking on how to be idle, how can the I could see that it doesnt exist ? the very breathing pre-supposes and re-iterates the I right. Please help me clarify. As you said, the dreamer cannot be seen in the dream, and so how does that understanding happens that we are a dream character, is it that the very idea gives the salvation ? Is what we call enlightenment is merely a change in attitude ?   Posted By: Saravanan on November, 2010

Answers :- The question is quite reasonable and worth asking. The I consciousness is always in existence. The I consciousness is absent, only in our dreamless sleep. We need not try to prove or establish the existence of I consciousness. It is there. It is an open fact. But whenever we have I conscious, we will never feel the unqualified I consciousness. We always feel that we are somebody or something. This is known as our ordinary I consciousness. It is only the qualified I consciousness. This is also a fact. We can usually visualize it. But there is no necessity for us to deal with these facts. We need not try to attain the unqualified I consciousness. If we try, it is again the effort of the qualified I consciousness. It is not the effort of the unqualified I consciousness to establish itself to be the unqualified I consciousness. Then is there any duty for our I consciousness to do? If it were the duty to attain the unqualified I consciousness, then there is some meaning for our effort. But we have found out that our ordinary I Consciousness cannot do it. So our duty is meaningless, if it were the duty to attain a psychological perfection. What is open for us to take sincere effort for our worldly duty? Enlightenment is nothing but finding out this fact that we need not do anything for our psychological perfection. So we become effortless to correct ourselves. It is righty said, ‘enlightenment is merely a change in attitude’. But we have not deliberately made this change. It happens on its own, when we understand that we need not do anything towards our psychological perfection, But to our surprise, our psychological structure itself under goes a tremendous change towards its perfection, when we have not given importance to its change.   Answered By: Sri Bagavath on December, 2010

Questions :- ஞானம் என்றால் என்ன என்பதை தெரியாமல் புரிந்து கொள்ள முடியாது. புரியாமல் தெரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கையில் கருத்தளவில் புரிந்து கொண்டால் கூட என்று சொல்லும்போது வேறு அளவு இருக்கிறதா? நாம், நமது மனம் இரண்டும் வெவ்வேறா?   Posted By: Bright on November, 2010

Answers :- மனதின் மூலமாகத்தான் அனைத்து விசயங்களையும் புரிந்தது கொள்கிறோம். எனது உடல், எனது பொருள் என்று அனைத்தையும் மனதின் அம்சமாகவே நாம் புரிந்தது கொள்கிறோம். மனதின் ஒரு பகுதிதான் நான் என்ற உணர்வாகவும் இருக்கிறது. எனவே நான் என்ற உணர்வும் மனதின் ஒரு பகுதிதான், நம்மால் காணப்படும் பொருளும் மனதின் ஒரு பகுதிதான் . நம்மால் அறிந்து கொள்ளமுடியாத பகுதியும் மனதில் நிறையவே உள்ளன. பொதுவாக ஒரு விஷயத்தை கருத்தளவில் புரிந்துகொண்டு பிறகு நடைமுறை படுத்தவேண்டும். ஞானத்தை புரிந்து கொள்வதில் அவ்வாறு இல்லை , கருத்தளவில் புரிந்துகொள்வதோடு அனைத்தும் முடிந்துவிடுகிறது. அகத்தில் செயல்படுத்த எதுவும் இல்லை. ஞான விடுதலை , கவலைகளுக்கெல்லாம் தீர்வு போன்ற புத்தகங்களை படித்து புரிந்துகொண்டாலே போதும். ஞானத்தெளிவு ஏற்ப்பட்டுவிடும்.   Answered By: Sri Bagavath on December, 2010

Questions :- ஞானம் என்பது அனுபவமாக உணர முடியுமா?   Posted By: கணேஷன் on November, 2010

Answers :- விடுதலை என்பது ஓர் அனுபவமல்ல, எந்த அனுபவத்தோடும் முரண்படாமல் இருப்பது.   Answered By: Sri Bagavath on December, 2010

Questions :- ஞானம் பெறுவதற்கு வெறும் அறிவுபூர்வமான புரிதல் மட்டும் போதுமா?   Posted By: Sekar on November, 2010

Answers :- ஞானம்என்றால் என்ன என்பதை ஒருவர் கருத்தளவில் புரிந்தது கொண்டால் கூட, அவர் ஞானம்பெற்று விட்டதாகத்தான் அர்த்தம். இதுதான் புரிதல் என்று நாம் புரிந்து கொண்ட நிலையில், நமது மனதும், இதுதான் புரிதல் என்று தனக்குள் எதிரொலிக்க செய்யவேண்டும்.   Answered By: Sri Bagavath on December, 2010



Buy Books